சித்திரைத் திருவிழாவுக்குத் தடைபோடாதே!- வீதிக்கு வந்து போராடும் மதுரை மக்கள்

சித்திரைத் திருவிழாவுக்குத் தடைபோடாதே!- வீதிக்கு வந்து போராடும் மதுரை மக்கள்

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

ஆண்டுக்கு 280 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறும் மதுரைக்கும், ஒரு விசேஷத் திருவிழா இருக்கிறது. அது தான் சித்திரைத் திருவிழா. அத்தனை சிறப்புவாய்ந்த சித்திரைத் திருவிழாவுக்கு இந்த ஆண்டும் தடை விதித்திருப்பது, மதுரை மக்களை வீதியில் இறங்கி போராடவைத்திருக்கிறது.

தென்தமிழகத்திலேயே மிகப்பெரிய திருவிழாவான இது, கடந்த ஆண்டு கரோனாவைக் காரணம் காட்டி ரத்து செய்யப்பட்டது. அதற்கு 2 வாரங்களுக்கு முன்பே கடுமையான பொதுமுடக்க விதிகள் நடைமுறைக்கு வந்துவிட்டதால், மக்களும் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், இந்த ஆண்டும் சித்திரைத் திருவிழாவுக்கு தடைவிதித்திருப்பது மதுரை மக்கள் மத்தியில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. தடையை எதிர்த்து மதுரைக்குள் தன்னெழுச்சியான போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

சித்திரைத் திருவிழாவால் வாழ்வாதாரம் பெறும் சிறுகுறு வியாபாரிகள், பந்தல் அமைப்பாளர்கள், பூ வியாபாரிகள், கைவினைக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த 12-ம் தேதி மதுரை தமுக்கம் மைதானம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். திடீரென அவர்கள் சாலை மறியலும் செய்தனர். உடனே காவல்துறை அவர்களைக் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தியது. ஆனாலும் போராட்டம் ஓயவில்லை. மறுநாளும் அதே இடத்தில் போராட்டம் நடந்தது. இதேபோல மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மீனாட்சியம்மன் கோயில் ஆகிய இடங்களிலும் பக்தர்கள் கூடுவதும் கோஷமிடுவதும் தொடர்கதையாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in