தி.ந.ராமச்சந்திரன்: தமிழுக்கு சப்பரம் சுமந்த திருத்தொண்டர்!

தி.ந.ராமச்சந்திரன்: தமிழுக்கு சப்பரம் சுமந்த திருத்தொண்டர்!

ஜெய்
jeyakumar.r@hindutamil.co.in

சைவத் தமிழறிஞர் தி.ந.ராமச்சந்திரனின் மறைவு தமிழ் ஆர்வலர்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. எழுத்தாளர்கள், வாசகர்கள், பேராசிரியர்கள் எனப் பல தரப்பினரும் தங்கள் முகநூல் பக்கத்தில் அவருக்கான தங்களின் அஞ்சலியைத் தமிழால் சாத்திவருகின்றனர். ஆங்கிலத்துக்குத் தமிழைக் கொண்டுசென்று அருட்கொடை செய்த ராமச்சந்திரன் குறித்த தேடல்களை நோக்கி அந்த அஞ்சலிக் குறிப்புகள் வழிநடத்துகின்றன.

சைவப் பேரறிஞர், சேக்கிழார் அடிப்பொடி எனப் பல சிறப்புப் பெயர்களால் போற்றப்படும் தில்லைஸ்தானம் நடராஜன் ராமச்சந்திரன், கோனேரிராஜபுரத்தில் 1934-ல் பிறந்தவர். டி.என்.ஆர் என அனைவராலும் அழைக்கப்படும் இவர், தில்லைஸ்தானம், திருவையாறு ஆகிய ஊர்களில் பள்ளிக் கல்வி பயின்றார். ஆங்கிலக் கல்வி முறையில் படித்திருந்தாலும் தமிழ் மீது கொண்ட காதலால் தி.வே.கோபாலய்யர் என்பவரிடம் தமிழைக் கற்றுத் தேர்ந்தார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் வணிகவியலில் பட்டம் பெற்றார். பிறகு சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். 1958-லிருந்து வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். ஒருகட்டத்தில் தமிழ் ஆர்வத்தால் தனது வழக்கறிஞர் தொழிலையும் துறந்தார்.

பாரதியியல் முன்னோடி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in