தமிழில் பொறியியல் படிப்பு- கரிசனமா... கண் துடைப்பு நாடகமா?

தமிழில் பொறியியல் படிப்பு- கரிசனமா... கண் துடைப்பு நாடகமா?

ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in

“தாய்க்குத் தரும் மரியாதையைத் தாய்மொழிக் கல்விக்கும் அளிப்போம்!” என்று மேடையில் முழங்கிவிட்டு இறங்கினார் அந்த அதிகாரி. அடுத்த நாள், அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கலந்தாய்வின்போது தமிழில் இயந்திரவியல் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்த மாணவனிடம், “என்ன தம்பி! படிச்சு முடிச்சு வேலைக்குப் போகணும்னு ஆசையில்லையா?” என்ற கேள்வியையும் அதே அதிகாரிதான் எழுப்பினார். இத்தகைய இரட்டை நிலைப்பாடுதான் கல்வியைப் பொறுத்தமட்டில் தமிழகத்தில் இன்றைய நிலைமை. உணர்வுபூர்வமாகத் தாய்மொழிக் கல்வியை ஆதரிப்பதும், தாய்மொழி படித்துவிட்டு வேலைவாய்ப்புச் சந்தையில் திண்டாடுவதும் இங்கு நெடுங்காலமாக நீடிக்கும் சிக்கல்.

யாருக்கு விருப்பம்?

இந்நிலையில், தேசிய கல்விக் கொள்கை 2020-ல் முன்வைக்கப்பட்ட மும்மொழிக் கொள்கை, தேசியத் தேர்வு முகமை மூலம் அனைத்து உயர்கல்விப் பட்டப் படிப்புக்குமான நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டம், அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் தொழிற்கல்வியைக் கொண்டுவருதல் உள்ளிட்டவை தமிழகத்தில் கடும் எதிர்ப்புக்கு உள்ளாயின. இருப்பினும் தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அதில் உறுதியளிக்கப்பட்டது வரவேற்கப்பட்டது. இதை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியாலும் அறிவித்தார். அதன்படி, வரும் கல்வி ஆண்டு முதல் பொறியியல் பட்டப் படிப்பைத் தமிழிலும் படிக்கலாம் என்று அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) அண்மையில் அறிவித்துள்ளது.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், வங்காளம், குஜராத்தி, மராத்தி, இந்தி ஆகிய 8 பிராந்திய மொழிகளில் மெக்கானிக்கல், சிவில், கணினி அறிவியல், எலெக்ட்ரிக்கல் எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய பொறியியல் பட்டப் படிப்புகளை வழங்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in