இசைவலம்: சைந்தவியின் பிரேமை!

இசைவலம்: சைந்தவியின் பிரேமை!

வா.ரவிக்குமார்
readers@kamadenu.in

தொடக்ககாலத் தமிழ் சினிமாவைச் செதுக்கியவர்களுள் முக்கியமானவர் எல்லீஸ் ஆர்.டங்கன். அவரின் இயக்கத்தில் 1940-ல் வெளிவந்த திரைப்படம் ‘சகுந்தலை’. மகாகவி காளிதாசரின் ‘அபிக்ஞான சாகுந்தலம்’ என்னும் சம்ஸ்கிருத நாடகத்தைத் தழுவி, வங்காளம், அசாமிய மொழியிலும் மேற்குலக நாடுகளின் பல மொழிகளிலும் நாடகங்களையும் திரைப்படங்களையும் பல கலைஞர்கள் உருவாக்கி யிருக்கின்றனர். தமிழில் திரைவடிவம் கண்ட ‘சகுந்தலை’யிலும் பல சிறப்புகள் இருந்தாலும், அந்நாளில் ரசிகர்கள் பெரிய அளவில் இந்தத் திரைக் காவியத்தைக் கொண்டாடியதற்குக் காரணம், பாடல்கள்தான்!

இந்தப் படத்தில் கர்னாடக இசை உலகில் கோலோச்சிய ஜி.என்.பாலசுப்பிரமணியம் துஷ்யந்தனாகவும், அவரிடம் சங்கீதம் கற்று நிபுணத்துவம் பெற்ற எம்.எஸ்.சுப்புலட்சுமிசகுந்தலையாகவும் நடித்திருந்தனர். படத்தில் உள்ள 24 பாடல்களில், பாபநாசம் சிவன் எழுதி எஸ்.வி. வெங்கட்ராமன், துறையூர் ராஜகோபால சர்மா இருவர் இசையமைத்த ‘பிரேமையில் யாவும் மறந்தோமே’ பாடலை ஜிஎன்பி-யும் எம்.எஸ்-சுப்புலட்சுமியும் பாடியிருப்பார்கள்.

இப்போது இந்தப் பாடலைத் தன்னுடைய இனிமையான குரலில் மிக அருமையாக மீட்டுருவாக்கம் செய்து பாடியிருக்கிறார், பின்னணிப் பாடகி சைந்தவி. பாடலுக்கான சிட்டஸ்வரத்தைப் பாடிவிட்டு, பிரேமையில் என்று தொடக்கத்திலேயே நம்மைப் பாட்டோடு ஐக்கியப்படுத்திவிடுகிறார் சைந்தவி. இந்தப் பாடலைப் பாடியதற்கு என்ன காரணம் என்று அவரிடம் கேட்டோம்.
“என் மனதுக்கு மிகவும் நெருக்கமான பாடல் இது. ஜிஎன்பி - எம்.எஸ் டூயட்டான இதில், ஜிஎன்பி சார் பாடிய வரிகளையும் நானே பாடியிருக்கிறேன். மறக்க முடியாத அனுபவமாக அது அமைந்தது” என்றார் சைந்தவி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in