ரகசிய விசிட்... ரசிக்கவைத்த காளான் பிரியாணி!- ராகுலைச் சுண்டியிழுத்த நாட்டுப்புற நளபாகர்கள்

ரகசிய விசிட்... ரசிக்கவைத்த காளான் பிரியாணி!- ராகுலைச் சுண்டியிழுத்த நாட்டுப்புற நளபாகர்கள்

கரு.முத்து
muthu.k@kamadenu.in

இன்னமும் விலகாத இன்ப அதிர்ச்சியில் இருக்கிறார்கள், ‘வில்லேஜ் குக்கிங்’ யூடியூப் சேனலைச் சேர்ந்த சமையல் கலைஞர்கள். தாங்கள் சமைத்த காளான் பிரியாணியை, ராகுல் காந்தி நேரில் வந்து சுவைத்துப் பாராட்டியதை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்று சிலிர்ப்புடன் சொல்கிறார்கள் இந்த நாட்டுப்புற நளபாகர்கள்!

சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்காகத் தமிழகம் வந்திருந்த ராகுல் காந்தி, நெசவாளர்களுடன் உணவருந்தியது, மாட்டு வண்டியில் பயணித்தது, சிறுமியுடன் செல்ஃபி எடுத்தது, தெருவோர டீக்கடையில் தேநீர் அருந்தியது என அடுத்தடுத்து அசத்தல் சிக்ஸர்களை அடித்தார். அவரது எளிமையான அணுகுமுறை தமிழக மக்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் ‘வில்லேஜ் குக்கிங்’ யூடியூப் சேனல் குழுவினருடன் அவர் சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்தக் கணம் வரை, அந்த நிகழ்ச்சியை யூடியூப் வழியே  சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்திருக்கிறார்கள். அது உலகளவில் வைரலாகி ராகுலின் இமேஜை உச்சம் தொட வைத்திருக்கிறது.

புதுகைக்காரர்கள்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in