“என்னை இந்திரா காந்தின்னு சொல்லுவாங்க!’’- பத்மஸ்ரீ பாப்பம்மாள் பளிச்

“என்னை இந்திரா காந்தின்னு சொல்லுவாங்க!’’- பத்மஸ்ரீ பாப்பம்மாள் பளிச்

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

குடியரசு தினம். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி கிராமத்தில் உள்ள அந்த வீட்டின் முன்பு பேட்டிக்காகக் காத்திருக்கிறார்கள் சேனல்காரர்கள். “பாட்டிதான் கொடியேற்ற வேண்டும்” என்று அழைத்துச் செல்ல ஊராட்சித் தலைவர், செயலாளர் சில உறுப்பினர்களும் காத்து நிற்கிறார்கள். அப்போதுதான் குளித்து முடித்து, நீளமான வெள்ளி முடிக்கூந்தலை உலரவிட்டபடி, பளீரென்ற நீல நிறப் புடவையுடன் வெளிப்படுகிறார், 105 வயது பாப்பம்மாள் பாட்டி என்கிற ரங்கம்மாள். இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதாளர்களில் ஒருவர்.

“நான் இந்த விருதையெல்லாம் எதிர்பார்க்கவேயில்லை கண்ணு. சொந்தக்காரங்க வூட்டுக்கு நேத்து சாயங்காலம் போயிருந்தேன். அப்பத்தான் எனக்கே தகவல் தெரிஞ்சுது. என்னமோ விருது குடுக்கறாங்களாமா... டீவியில சொன்னாங்க. இதை என்னமோ டெல்லி போய்த்தான் வாங்கோணும்ங்கிறாங்க. அப்படிப் போனா அதுக்கு யாரு செலவு செய்வாங்க?’’ வெள்ளந்தியாகப் பேசுகிறார் பாப்பம்மாள். ‘பத்மஸ்ரீ’ என்ற வார்த்தையே பாப்பம்மாளின் வாயில் நுழையவில்லை. ‘‘அது என்னமோ, வாயில நுழைய மாட்டேங்குது. விடு கண்ணு’’ என்கிறார் வெட்கச் சிரிப்புடன்.

அடுத்தடுத்து சேனல்கள்... பேட்டி முடிவதாகத் தெரியவில்லை. கொடியேற்றும் நேரம் தவறிவிடும் என ஊராட்சித் தலைவர், செயலாளர் குழாம் திரும்பிச் சென்றுவிடுகிறது. பரபரப்பெல்லாம் அடங்கியதும், நம்மை வீட்டுக்குள் அழைத்துச் சென்று அமர வைத்துப் பேசுகிறார் பாப்பம்மாள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in