தலைமை ஆசிரியர்கள் வழி காட்டட்டும்!

தலைமை ஆசிரியர்கள் வழி காட்டட்டும்!

உமா
uma2015scert@gmail.com

சமீபத்தில், ‘இந்து தமிழ் திசை’யின் ‘அன்பாசிரியர்’ விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற அந்நிகழ்ச்சியில், பல மாவட்டங்களிலிருந்து ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். தங்கள் பள்ளியின் வளர்ச்சியில் தன்னலம் பாராமல் உழைக்கும் தலைமை ஆசிரியர்கள் சிலரை இந்நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது.

சாதித்த தலைமை ஆசிரியர்கள்

தமிழகத்திலேயே அதிக மாணவர் சேர்க்கையுள்ள பள்ளியாகத் தன்னுடைய பள்ளியை மாற்றியிருக்கும் தலைமை ஆசிரியர் தென்னவனைச் சந்தித்தது மிகுந்த உத்வேகம் தந்தது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவரான தென்னவன், தனது பள்ளியின் வளர்ச்சிக்காக மக்களிடமிருந்து 75 லட்ச ரூபாய் சேகரித்துத் தந்தவர். பள்ளியின் தரத்தை உயர்த்த பாடுபட்டவர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in