இந்தியன் நெ. 1 - கிரிக்கெட் கேப்டன் சி.கே.நாயுடு

இந்தியன் நெ. 1 - கிரிக்கெட் கேப்டன் சி.கே.நாயுடு

பி.எம்.சுதிர்
sudhir.pm@hindutamil.co.in

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய முதல் இந்தியர் ரஞ்சித்சிங்ஜியாக இருக்கலாம். ஆனால், இந்தியாவில் ஆரம்ப காலத்தில் அந்த விளையாட்டை பிரபலப்படுத்தியவர் சி.கே.நாயுடு. இந்திய கிரிக்கெட்டின் தொடக்க காலத்தில் அதிரடி பேட்ஸ்மேனாக இருந்த சி.கே.நாயுடு, தனது பேட்டிங் ஸ்டைலால் பல இளைஞர்களைக் கவர்ந்து கிரிக்கெட் ஆடவைத்தார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் முதல் கேப்டனாகவும் அவர் பொறுப்பு வகித்தார். அவரைப் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.
 இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் சி.கே.நாயுடு என்று அழைக்கப்படும் கோட்டாரி கனகய்யா நாயுடு, 1885-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி நாக்பூரில் பிறந்தார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், இளமைப் பருவத்தில் இவர் நாக்பூரிலேயே தங்கியிருந்தார்.  சி.கே.நாயுடுவின்  குடும்பம்  செல்வச் செழிப்புமிக்கதாக இருந்தது. அவரது தாத்தா ராய் பகதூர் கோட்டேரி நாராயண் சாமி நாயுடு, நிலச்சுவான்தாராகவும், வழக்கறிஞராகவும் இருந்தார். அத்துடன் காங்கிரஸ் கட்சியிலும் அவர் முக்கியப் பதவிகளில் இருந்தார்.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.