ஹை-மிர்ரர்- மெய் பேசும் மாயக் கண்ணாடி!

ஹை-மிர்ரர்- மெய் பேசும் மாயக் கண்ணாடி!

லதா ரகுநாதன்
lrassociates@gmail.com

“ஏன் உங்கள் முகம் இவ்வளவு சோர்ந்து போயிருக்கு?” என்று யாரேனும் கேட்டால், நம் உள்ளமும் சோர்ந்துவிடுகிறது அல்லவா? உடனடியாகக் கண்ணாடி முன்ன்று, முகத்தைப் பார்த்து, `நல்லா ஃப்ரெஷ்ஷா இருக்கோமே? அவர் வேணும்னே அப்படிச் சொல்லியிருப்பார்' என்று நம்மை நாமே சமாதானப் படுத்திக்கொள்வோம். ஆனால், “அவர் உண்மையைத்தான் சொல்லியிருக்கார். பாரு உன் கண்ணுக்குக் கீழே கருவளையம் இருக்கு” என்று அந்தக் கண்ணாடி நம்மிடம் சொன்னால்? அப்படிச் சொல்ல அதென்ன மாயக்கண்ணாடியா என்கிறீர்களா? அப்படிப்பட்ட மாயக்கண்ணாடி மார்க்கெட்டுக்கே வந்துவிட்டது. இதன் பெயர் ‘ஹை-மிர்ரர்’ (Hi - Mirror).

என்னென்ன செய்யும்?

செல்போனில் செல்ஃபி மோடு போட்டு, கண்ணாடியாகப் பாவித்து முகம் பார்த்துக்கொள்கிறோம் அல்லவா... கிட்டத்தட்ட அதைப் போன்றதுதான் இது. ஆனால், இதன் பயன்பாடுகள் அதிகம். பார்க்க, வழக்கமான கண்ணாடி வடிவத்தில்தான் இருக்கிறது. இதன் முன் நின்றால், உங்கள் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள், கருவளையங்கள்…இன்ன பிற குறைகள் எல்லாவற்றையும் வட்டம் போட்டுச் சுட்டிக்காட்டும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in