கீன் ஏன் பயம் ஏன்? - விநோத பழக்கங்களுக்கு குட்பை சொல்லுங்கள்

கீன் ஏன் பயம் ஏன்? - விநோத பழக்கங்களுக்கு குட்பை சொல்லுங்கள்

லதா ரகுநாதன்
lrassociates@gmail.com

உங்களுக்கு அடிக்கடி கைவிரல் நகத்தைக் கடித்துக்கொண்டே இருக்கும் பழக்கம் உண்டா? அனிச்சையாக நகத்தைக் கடிப்பதை உணர முடிந்தாலும் அதை நிறுத்த முடியாமல் தவிக்கிறீர்களா? கவலையே வேண்டாம். உங்களுக்குக் கைகொடுக்க ஒரு சாதனம் சந்தைக்கு வந்துவிட்டது. இதன் பெயர், ‘கீன்’ (Keen).

கையில் பிரேஸ்லெட் போல் அணிந்து கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்தச் சாதனம், அடிக்கடி நகம் கடித்தல், புருவம், மீசையிலிருந்து முடியைப் பிடுங்குதல் போன்ற உடல் சம்பந்தப்பட்ட, மீண்டும் மீண்டும் செய்யும் செய்கைகளிலிருந்து (FRB - Body Focused Repetitive Behaviour) உங்களை விடுவிக்கும் ஆற்றல் கொண்டது.

குழந்தைகள் கட்டை விரல் சூப்பும் பழக்கத்தை மாற்றுவதற்கு செய்யும் தந்திரம் நினைவிருக்கிறதா? விளக்கெண்ணெய்யைக் குழந்தையின் கட்டை விரலில் தடவிவிடுவோம். இதனால் தன்னை அறியாமல் குழந்தை வாய்க்குள் விரலைச் செலுத்தும்போது அந்தக் கசப்பு அருவருப்பு மூட்ட, நாளடைவில் அந்தப் பழக்கம் விட்டுப்போய்விடும். கிட்டத்தட்ட அதே வழிமுறையைத்தான் இந்த ‘கீன்’ பின்பற்றுகிறது. இப்படி ஒரு சாதனம் பிறந்ததன் பின்னால், அனீலா எனும் அமெரிக்கப் பெண்ணின் வேதனை இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in