பலனற்றுப் போகும் பயிற்சி வகுப்புகள்!

பலனற்றுப் போகும் பயிற்சி வகுப்புகள்!

உமா
uma2015scert@gmail.com

 எந்த ஒரு பணிக்கும் பயிற்சி என்பது அவசியமான ஒன்று. பணியேற்பதற்கு முன்பு தரப்படும் பயிற்சிகள், பணியேற்ற பின்பு தரப்படும் பணியிடைப் பயிற்சிகள் என்று அதில் இரண்டு வகைகள் உண்டு. ஆசிரியர்களும் பயிற்சி எடுத்துக்கொண்ட பிறகுதான் பணியேற்கின்றனர். பணிக் காலத்தில் தொடர்ந்து பணியிடைப் பயிற்சிகளும் அவர்களுக்குத் தரப்படுகின்றன. உண்மையில், இந்தப் பயிற்சிகளின் தன்மை என்ன? இவற்றில் என்னென்ன விதமான சிக்கல்கள் இருக்கின்றன? ஆராய்வோம்.

சமீபத்தில், தமிழகப் பள்ளி ஆசிரியர்கள், கூட்டம் கூட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓரிடத்தில் வரவழைக்கப்பட்டார்கள். தொடர்ச்சியாக 5 நாட்கள் அவர்களுக்குப் பயிற்சி தரப்பட்டது. இதன் பின்னணி என்ன?

தேசிய அளவில் எல்லா மாநிலங்களிலும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் இணையம் வழியாகப் பதிவுசெய்து பயிற்சி தருகிறது அரசு. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டமும் (சமக்ர சிக் ஷா அபியான்), மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் (SCERT) இணைந்துதான் இந்தப் பயிற்சியைத் தருகின்றன. தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (NCERT) வழியாகப் பயிற்சி நடத்த வழிகாட்டப்படுகிறது. இந்தப் பயிற்சியின் பெயர் ‘நிஸ்தா’ - NISTHA (National Initiative for School Heads and Teachers Holistic Advancement).

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in