லிப்ரா: க்ரிப்டோகரன்ஸியில் புதுவரவு- ஃபேஸ்புக்கின் திட்டம் பலிக்குமா?

லிப்ரா: க்ரிப்டோகரன்ஸியில் புதுவரவு- ஃபேஸ்புக்கின் திட்டம் பலிக்குமா?

லதா ரகுநாதன்
lrassociates@gmail.com

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடிக்கடி கோபப்படுபவர். மேடைப் பேச்சிலும் ட்விட்டர் பக்கத்திலும் எதையாவது ஒரு விஷயத்தைப் பற்றி, ஒரு நபரைப் பற்றிக்  குறைகூறாமல் அவருக்குத் தூக்கமே வராது. சமீபத்தில் அவரது கடும் கோபத்துக்குக் காரணம் லிப்ரா.
“ட்ரம்பையே கடுப்பேற்றும் அந்த லிப்ரா யார்... ஈரான்காரரா?” என்று கேட்டுவிடாதீர்கள். அது ஒரு கரன்ஸி. அதுவும் நாம் அனுதினமும் புழங்கும் ஃபேஸ்புக் நிறுவனம் விரைவில் கொண்டுவரப்போகும் க்ரிப்டோகரன்ஸி.

பிட்காயின்

லிப்ராவைப் பற்றியும் டிரம்பின் கோபத்தைப் பற்றியும் பார்ப்பதற்கு முன்னர், க்ரிப்டோகரன்ஸி பற்றிக் கொஞ்சம் பார்த்துவிட்டுவருவோம். மெய்நிகர் பணப் பரிவர்த்தனைக்கு என்று கொண்டுவரப்பட்ட உருவமில்லா கரன்ஸி அது. முதன்முதலாக வெளிவந்த க்ரிப்டோகரன்ஸியின் பெயர் ‘பிட்காயின்’. 2009-ல், சடோஷி நகமோட்டோ எனும் அடையாளம் தெரியாத நபரால் உருவாக்கப்பட்டது இது. சடோஷி என்பவர் தனிநபரா அல்லது பல பேர் சேர்ந்த குழுவா என்பதெல்லாம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இதன் அடிப்படை ‘க்ரிப்டோகிராஃபி’ (cryptography). அதாவது குறியீட்டு முறை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in