நான் பேச நினைப்பதெல்லாம்.. இனி நானே பேசுவேன்!

நான் பேச நினைப்பதெல்லாம்.. இனி நானே பேசுவேன்!

ஆசை

வாய்பேச முடியாதவர்களுக்கு சர்க்கரைத் தித்திப்பாக ஒரு நற்செய்தியை அறிவியலாளர்கள் தற்போது அறிவித்திருக்கிறார்கள்! ஆம், மூளையின் செயல்பாட்டை வைத்துப் பேச்சை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் பேர்சொல்லும் அளவுக்கு முன்னேறிவிட்டார்கள்!

செயற்கைப் பேச்சுத் தொழில்நுட்பம் என்றதும் இதன் மூலம் சிவாஜி மாதிரி பக்கம் பக்கமாக வசனம் பேசலாம் என்றெல்லாம் கற்பனை செய்துகொள்ள வேண்டாம். தற்போது தொடக்க நிலையில்தான் இந்தத் தொழில்நுட்பம் இருக்கிறது.

“ஒரு தனிமனிதரின் மூளைச் செயல்பாட்டை வைத்து முதன்முறையாக முழு வாக்கியங்களை உருவாக்க நம்மால் முடிந்திருக்கிறது. இதன் மூலம் ஏற்கெனவே இருக்கும் தொழில்நுட்பங்களை இணைத்து ஒரு கருவியை உருவாக்கலாம். பேச்சுத்திறன் அற்றவர்களுக்கு மருத்துவ ரீதியில் எளிதில் பொருந்தும் வகையில் இருக்கும்” என்கிறார் எட்வர்டு சாங். இவர்  கலிஃபோர்னியா சான்ஃபிரான்சிஸ்கோ பல்கலைக் கழகத்தின் நரம்பியல் அறுவை மருத்துவப் பேராசிரியராக இருக்கிறார். இந்தக் கண்டுபிடிப்புக் குழுவில் முக்கிய உறுப்பினரும் கூட.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in