நாள் ஒன்றுக்கு ரூபாய் 7 வீதம் செலுத்தி வந்தால் 60 வயதுக்குப் பிறகு அவர்களுக்கு மாதாமாதம் 5000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும் வகையிலான புதிய திட்டம் இந்தியாவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்தியாவில் மூத்த குடிமக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்கள் மற்றும் ஓய்வூதியம் கிடைக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன.
பிக்சட் டெபாசிட் உள்ளிட்ட திட்டங்களில் பொது வாடிக்கையாளர்களைக் காட்டிலும் மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் சற்று அதிகமாகவே வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் மத்திய அரசின் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் தினமும் ரூ. 7 முதலீடு செய்தால் திட்ட முடிவில் மாதம் ரூ.5,000 வரை பென்ஷன் பெற முடியும்.
இத்திட்டமானது 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது என்றாலும் அண்மைக் காலமாகத்தான் இதன் பயன் குறித்து பயனாளர்கள் அதிகம் உணர்ந்து கொள்ள ஆரம்பித்தனர். இந்தத் திட்டத்தில் 18 வயதில் ஒரு நபர் சேமிக்க தொடங்கினால் தினமும் ரூ. 7 என்ற கணக்கில் மாதம் ரூ. 250 செலுத்த வேண்டும். இவ்வாறு செலுத்தும் தொகையானது 60 வயதிற்கு பிறகு மாதம் ரூ.5000 ஓய்வூதியமாக திரும்பக் கிடைக்கும்.
இது மூத்த குடிமக்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும் என்பதால் இதை மக்கள் அதிகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.