3 ஆண்டுகளின் மின்சாரம் தாக்கி 222 யானைகள் பலி: மத்திய அரசின் அதிர்ச்சி புள்ளிவிவரம்!

கோப்புப் படம்
கோப்புப் படம்

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 307 யானைகள் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே மக்களவையில் வெளியிட்ட தரவுகளின்படி, வேட்டையாடுதல், மின்சாரம் தாக்குதல், விஷம் மற்றும் ரயில் விபத்துகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 307 யானைகள் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். இதில் கடந்த 3 ஆண்டுகளில் மின்சாரம் தாக்கி 222 யானைகள் உயிரிழந்துள்ளது. இதில் ஒடிசாவில் 41 யானைகளும், தமிழ்நாட்டில் 34 யானைகளும், அசாமில் 33 யானைகளும் அதிகபட்சமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல கடந்த 3 ஆண்டுகளில் ரயில் மோதி 45 யானைகள் உயிரிழந்துள்ளன. இதில் அதிகபட்சமாக ஒடிசாவில் 12 யானைகளும், மேற்கு வங்கத்தில் 11 யானைகளும் இறந்துள்ளன. இந்த காலகட்டத்தில் 29 யானைகள் வேட்டையாடப்பட்டதால் உயிரிழந்துள்ளன. இதில் அதிகபட்சமாக மேகாலயாவில் 12 யானைகள் மற்றும் ஒடிசாவில் 7 யானைகள் உயிரிழந்துள்ளன. இந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 11 யானைகள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக அசாமில் 9 யானைகள் இறந்துள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in