குட்நியூஸ்... கோடை விடுறையைக் கொண்டாட சிறப்பு ரயில்: கோவை- மங்களூரு இடையே இயக்கம்!

ரயில்
ரயில்

கோடை விடுமுறையையொட்டி கோவை - மங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சேலம் ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் கர்நாடக மாநிலம் மங்களூரு சென்ட்ரல் - கோவை இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

ரயில்
ரயில்

மங்களூரு சென்ட்ரலில் இருந்து வரும் 18, 25 மற்றும் ஜூன் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) காலை 9.30 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்.06041) அதேநாள் மாலை 5.25 மணிக்கு கோவை வந்தடையும்

மறுமார்க்கமாக, கோவையிலிருந்து வரும் 18, 25 மற்றும் ஜூன் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு மங்களூரு சென்ட்ரல் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06042) மறுநாள் காலை 6.55 மணிக்கு மங்களூரு சென்றடையும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in