சென்னை நகரில் நாளையில் இருந்து போக்குவரத்து மாற்றம்... எந்தெந்த பாதையில் போகலாம்னு தெரியுமா?

சென்னை
சென்னை

மெட்ரோ ரயில் திட்ட கட்டுமான பணிகள் நடைபெறுவதால் சென்னையில் மாநகரில் நாளை (மார்ச் 9) முதல் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரின் முக்கிய பொதுப்போக்குவரத்துகளில் ஒன்றாக மெட்ரோ ரயில் சேவை இருந்து வருகிறது. விரைவான மற்றும் பாதுகாப்பான பயணத்திற்காக மெட்ரோவை தேர்வு செய்யும் பணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலை ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் கட்டப்பட உள்ளது. இதையொட்டி, கட்டுமான பணிகளுக்காக போக்குவரத்தில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.

சென்னை மெட்ரோ ரயில்
சென்னை மெட்ரோ ரயில்

கடந்த 3-ம் தேதி சோதனை முயற்சியாக சில சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னையில் இரண்டு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மெட்ரோ கட்டுமான பணிக்காக மார்ச் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரம்
சென்னை நகரம்

இதையொட்டி அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலை ஆகிய இடங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை வழியாக திருப்பி விடப்படும். ஜெமினி மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள், எம்ஜிஆர் சாலை வழியாக வள்ளுவர் கோட்டம் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமைந்தகரை செல்லும் வாகனங்கள் டேங்க் மண்ட், நெல்சன் மாணிக்கம் சாலை வழியை பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in