சென்னையில் மழை
சென்னையில் மழை

8 மாவட்டங்களில் இன்று மழை கொட்டும்; வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 மழை
மழை

மத்திய பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று காலை நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கரூர், திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் தற்போது பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in