பயணிகள் மகிழ்ச்சி... திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்
திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்- திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்
திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே இரு மார்க்கங்களிலும் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வாராந்திர சிறப்பு ரயில் மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, திருநெல்வேலியில் இருந்து (ரயில் எண் 06030) அக்டோபர் 1, 8,15,22, 29 மற்றும் நவம்பர் 5, 12, 19, 26 ஆகிய 9 ஞாயிற்றுக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்திற்கு சிறப்பு ரயில் புறப்படும். ஒவ்வொரு ஞாயிறும் இரவு 7 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்
திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்

இதே போல் மறு மார்க்கத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து (ரயில் எண் 06029) அக்டோபர் 2, 9, 16, 23, 30 மற்றும் நவம்பர் 6, 13, 20, 27ஆகிய 9 திங்கள் கிழமைகளிலும் திருநெல்வேலிக்கு இயக்கப்படும்.

இந்த ரயில் ஒவ்வொரு திங்கள் கிழமை தோறும் மேட்டுப்பாளையில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in