நாளை முன்பதிவு துவக்கம்... ஓணம் பண்டிகைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் அறிவிப்பு
தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் அறிவிப்பு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து கொச்சுவெலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இது பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓணம் பண்டிகை
ஓணம் பண்டிகை

தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு அதிகரித்துள்ள பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு தாம்பரம் - கொச்சுவெலி இடையே சிறப்பு ரயில் (06047) இயக்கப்பட உள்ளது.

இம்மாதம் 26-ம் தேதி மாலை 5 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோயில், இரணியல், நெய்யாடின்கரா, திருவனந்தபுரம் சென்ட்ரல் வழியாக மறுநாள் காலை 8 மணிக்கு கொச்சுவெலியை சென்றடையும்.

இதே போல் மறு மார்க்கத்தில் 27-ம் தேதி பகல் 11.40 மணிக்கு கொச்சுவெலி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06048) 28-ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.

இந்த ரயிலில் 3டயர் எகனாமிக் பெட்டிகள் 14, சிலிப்பர் கிளாஸ் பெட்டிகள் 3, இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் 2, சரக்கு பெட்டிகள் 2 ஆகியன இணைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை 18-ம் தேதி காலை 8 மணி முதல் துவங்க உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in