நாகையிலிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தேதி திடீர் மாற்றம்!

நாகை- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து
நாகை- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து

நாகப்பட்டினம்- இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து நாளை துவங்க இருந்த நிலையில் வரும் 12ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து துவங்க வேண்டுமென இரு நாட்டு மக்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து மத்திய அரசு சார்பில் கப்பல் போக்குவரத்து துவங்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் கப்பல் போக்குவரத்திற்காக நாகை துறைமுகத்தில் குடிவரவு துறை, சுங்க பயணிகள் சோதனை மையம், மருத்துவ பரிசோதனைகள், பாதுகாப்பு என அனைத்துக்கும் தனித்தனியா அறைகள் கட்டப்பட்டுள்ளன.

நாகை-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து
நாகை-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து

நாகை துறைமுகத்தில் காலை 7:30 மணிக்கு புறப்படும் கப்பல் 3 மணி நேரத்தில் காங்கேசன் துறைமுகத்தை அடையும். இதற்காக 18 சதவீத ஜிஎஸ்டி வரியுடன், ரூ.6,500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருவர் 50 கிலோ வரை பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாகை காங்கேசன் துறைமுகம் இடையிலான போக்குவரத்துக்கு கொச்சின் வடிவமைக்கப்பட்ட சேரியா பாணி என்ற கப்பல் நாகை வருகை தந்துள்ளது.

நாகை-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து
நாகை-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து

இலங்கை செல்ல விசா மற்றும் பாஸ்போர்ட் கட்டாயம் என்பதோடு, விமான நிலையங்களில் பின்பற்றப்படும் அனைத்து பாதுகாப்பு நடைமுறையும் கப்பல் பயணத்திற்கும் கடைபிடிக்கப்படும் என இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் 10ம் தேதி காலை 7.30க்கு கப்பல் கிளம்பும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 12ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கப்பல் போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in