மலேசியாவிற்குச் செல்ல டிச.1 முதல் விசா தேவையில்லை: திடீர் அறிவிப்பால் இந்தியர்கள் குஷி!

மலேசியா
மலேசியா

தாய்லாந்து, இலங்கையைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து மலேசியா சென்று வர விசா தேவையில்லை எனவும் டிசம்பர் 1-ம்தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலேசியா
மலேசியா

மலேசியாவிற்குச் செல்லும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக புதிய நடைமுறை அறிமுகம் செய்வதாக அந்நாட்டின் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக மேலும் அவர் குறிப்பிட்டதாவது,  சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு,  சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தோர் இனி விசா இன்றி மலேசியாவுக்குள் நுழையலாம்.  இந்தியா, சீனாவைச் சேர்ந்தவர்கள் மலேசியாவில் விசா இன்றி 30 நாள்கள் வரை தங்கலாம்.

மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம்
மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம்

புதிய நடைமுறை அடுத்த மாதம் (டிச.1) ஒன்றாம் தேதி முதல் நடமுறைக்கு கொண்டுவரப்படும்.  விசா தேவயில்லை என்றாலும் பயணிகள் குற்றப்பின்னணி அல்லது வன்முறையில் ஈடுபட்டிருக்கின்றனரா என்பதை அறியப் பாதுகாப்புச் சோதனைகள் நடத்தப்படும்.  இந்தியாவை விட சீனாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுப்பயணிகள் மலேசியாவிற்கு வர அதிக வாய்ப்புள்ளது எனக் குறிப்பிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in