முன்பதிவு தொடங்கியது... சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயிலில் பயணிக்க மக்கள் ஆர்வம்!

வந்தே பாரத் ரயில்
வந்தே பாரத் ரயில்

நாளை தொடங்க உள்ள சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் சேவைக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் சென்னை - மைசூரு, சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நெல்லை - சென்னை இடையேயான சேவை நாளை தொடங்குகிறது. ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.

இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நிறைவடைந்தது. நேற்று முன்தினம் ரயில் சென்னையில் இருந்து நெல்லை சென்றது. அதைத் தொடர்ந்து நெல்லையில் இருந்து சென்னை நேற்று வந்தது. அப்போது குறித்த நேரத்தில் ரயில் இலக்கை அடைந்ததால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வந்தே பாரத் ரயில்
வந்தே பாரத் ரயில்

இதற்கு ஏ.சி சொகுசு வகுப்பு கட்டணம், சேர் கார் கட்டணம் என இரண்டு வகையான கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உணவு, ஜிஎஸ்டி, முன்பதிவு என அனைத்தும் சேர்த்து, ஏ.சி சொகுசு வகுப்புக் கட்டணம் 3,025 ரூபாய். சேர் கார் கட்டணம் 1,620 ரூபாய்.

இந்த ரயில் விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். நாளை தொடக்க விழா நடைபெற்றாலும், திங்கள்கிழமையில் இருந்துதான் முறைப்படி இந்த ரயில் இயக்கப்படுகிறது.

நெல்லையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை வரும் ரயில், மறு மாா்க்கத்தில் சென்னையிலிருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு நெல்லை செல்லும். இந்நிலையில் சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in