குட்நியூஸ்! தீபாவளியை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

சென்னை மெட்ரோ ரயில் சேவை
சென்னை மெட்ரோ ரயில் சேவை

தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக நாளை முதல் சனிக்கிழமை வரை கூடுதல் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக மாலை நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை, நாளை 09.11.2023 (வியாழக்கிழமை), 10.11.2023 (வெள்ளிக்கிழமை) மற்றும் 11.11.2023 (சனிக்கிழமை) ஆகிய நாட்களில் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில்
மெட்ரோ ரயில்

மேலும், “நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில், இரவு 8 மணி முதல் 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த மெட்ரோ ரயில் நீட்டிப்பு சேவை 09.11.2023 (வியாழக்கிழமை). 10.11.2023 (வெள்ளிக்கிழமை) மற்றும் 11.11.2023 (சனிக்கிழமை) ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டுமே'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில்
சென்னை மெட்ரோ ரயில்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in