தொடர் விடுமுறையின் தாக்கம்... விமான கட்டணம் வானுக்கு உயர்ந்தது!

விமான பயணம்
விமான பயணம்

தொடர் விடுமுறை காரணமாக மக்களின் வெளியூர் பயணங்கள் அதிகரித்ததில், விமான கட்டணங்களும் விண்ணுக்கு உயர்ந்துள்ளன.

இடையில் ஒரு நாள் விடுப்பு எடுத்தால், மிலாடி நபியில் தொடங்கி காந்தி ஜெயந்தி வரையிலான விடுமுறை வாய்ப்பு அலுவலக ஊழியர்களுக்கு கிடைத்தது. பள்ளி மாணவர்களுக்கு ஏற்கனவே காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சொந்த ஊர் திரும்புவோர் மற்றும் சுற்றுலா செல்வோர் என மக்கள் மத்தியிலான போக்குவரத்து அதிகரித்துள்ளது.

ரயில், பேருந்து முன்பதிவுகள் முடிந்திருக்க, முன்பதிவு இல்லாத இருக்கைகளுக்கு நெருக்கடியும் நேர்ந்திருக்கிறது. சூழலை உத்தேசித்து ஆம்னி பேருந்து கட்டணங்கள் வெகுவாய் உயர்த்தப்பட்டுள்ளன. தரை மார்க்கத்திலான கட்டணங்கள் மட்டுமன்றி வான் மார்க்கத்திலான விமான கட்டணங்களும் வானுக்கு உயர்ந்துள்ளன.

விமான பயணம்
விமான பயணம்

உள்நாடு மற்றும் வெளிநாடு என சகல விமான பயணங்களின் கட்டணமும் கணிசமாக உயர்வு கண்டுள்ளன. விடுமுறை வாய்ப்பை இழக்க விரும்பாத மக்களும் எகிறிய கட்டண உயர்வுக்கு இணங்க வேண்டியதாயிற்று.

உதாரணத்துக்கு, திருச்சி - சென்னை விமா கட்டணம் ரூ21,526; தூத்துக்குடி - சென்னை ரூ18,365; மதுரை - சென்னை கட்டணம் ரூ19,000 என... விமான கட்டணங்கள் உயர்வு கண்டுள்ளன. ஆச்சரியமாக கோவை - சென்னை கட்டணம் மட்டும் ரூ7,789 என இறங்கியுள்ளது. இவற்றுக்கு அப்பால் இந்தியாவின் இதர மாநாகரங்களுக்கான விமான கட்டணம் மற்றும் வெளிநாட்டுப் பயணத்திற்கான கட்டணம் ஆகியவையும் பல மடங்கு உயர்வு கண்டுள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in