5 ஆயிரம் ரூபாயில், ஹெலிகாப்டர் பயணம்... தமிழக சுற்றுலாத்துறையின் அசத்தல் திட்டம்!

ஹெலிகாப்டர்
ஹெலிகாப்டர்

கோவளம் மற்றும் முட்டுக்காடு பகுதியை 5 ஆயிரம் ரூபாயில் ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்க்க தமிழக சுற்றுலாத்துறையுடன் இணைந்து தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.  

தமிழக சுற்றுலாத்துறையுடன் இணைந்து தனியார் நிறுவனம் சார்பில்  முட்டுக்காடு படகு துறை, கேளம்பாக்கம், திருவிடந்தை போன்ற பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் சுற்றி பார்த்துவிட்டு வரும் வசதி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கு பயணிகள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர். நேற்று காலை 11 மணிக்கு முதல் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதில் பயணம் செய்ய ஒரு பயணிக்கு 5000 ரூபாய் கட்டணம் என்றும் பத்து நிமிடம் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.  

நேற்றைய முதல் நாளில் மட்டும் 20 முறை ஹெலிகாப்டர் இயக்கப்பட்டது என்றும் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் இதில் ஹெலிகாப்டர் மூலம் பறந்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரம்மியமான காட்சிகளை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தினத்திலும் அதிக சுற்றுலா பயணிகள் ஹெலிகாப்டரில் சுற்றி பார்க்க உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தீபாவளியன்று இப்படி விளக்கேற்றினால் ஐஸ்வர்ய கடாட்சம் கிட்டும்!

வெடித்து சிதறும் பட்டாசுகள்... 3 மாவட்டங்களில் காற்று மாசு அதிகரிப்பு!

மோடியை அலற வைத்த இளம்பெண்... பிரச்சார பொதுக்கூட்டத்தில் பரபரப்பு!

திருப்பதியில் இன்று தீபாவளி ஆஸ்தானம்... லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!

தனுஷ் முதல் சமந்தா வரை... மூன்றாவது நபர் தலையீட்டால் பிரிந்த பிரபலங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in