ரேஷன் கடை ஊழியர் கழுத்தை அறுத்துக்கொலை: சிக்கிய புதுமாப்பிள்ளை வாக்குமூலத்தால் போலீஸார் அதிர்ச்சி

ரேஷன் கடை ஊழியர் கழுத்தை அறுத்துக்கொலை: சிக்கிய புதுமாப்பிள்ளை வாக்குமூலத்தால் போலீஸார் அதிர்ச்சி

திருமணச்செலவிற்கு கடன் தர மறுத்த ரேஷன்கடை ஊழியரை கழுத்தை அறுத்துக் கொலை செய்த புதுமாப்பிள்ளையை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மாளிகை வீடு பகுதியைச் சேர்ந்தவர் திலீப்குமார். ரேஷன் கடை ஊழியரான இவர், வீட்டுக்கு அருகே உள்ள கரும்புத் தோட்டத்தில் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அப்போது அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச்சங்கிலி, செல்போன் ஆகியவை திருடு போய் இருந்தது.

இதைக் கண்டு அதிர்ந்து போன அவரது குடும்பத்தினர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து திலீப்குமார் உடல் பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. குற்றவாளியைக் கைது செய்யாவிட்டால், திலீப்குமார் உடலை வாங்க மாட்டோம் என அவரது குடும்பத்தினர், போலீஸாரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து திலீப்குமார் வசித்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் அரவிந்த், திலீப்குமாரை கொலை செய்தது தெரிய வந்தது. அவரை உடனடியாக கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது புதுமாப்பிள்ளையான அரவிந்த், திருமணச் செலவிற்கு திலீப்குமாரிடம் கடன் கேட்டுள்ளார். ஆனால், திலீப்குமார் தர மறுத்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து நகை, செல்போனை அரவிந்த் திருடியது தெரிய வந்தது.கொலை நடந்த போது திலீப்குமார் உடலை மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் கொண்டு சென்ற போது, அவர்களுடன் கொலை செய்த அரவிந்த்தும் சென்றது போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரை போலீஸார் இன்று கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in