விரைவில் வெளியாகிறது டிமாண்டி காலனி 2-ம் பாகம்!

விரைவில் வெளியாகிறது டிமாண்டி காலனி 2-ம் பாகம்!

அருள்நிதி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற ’டிமாண்டி காலனி’ படத்தின் 2-ம் பாகம் விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இரண்டாம் பாகத்திலும் அருள்நிதி நடித்துள்ளார். சஸ்பென்ஸ் த்ரில்லர் ஹாரோர் வகை படமான ‘டிமாண்டி காலனி’ பாகம் இரண்டின் டிரெய்லர் டிசம்பர் 16 அன்று வெளியாகிறது.

படத்தை அஜய் ஞானமுத்து தயாரிக்கிறார். வெங்கி வேணுகோபால் இயக்குகிறார். பிரியா பவானி சங்கர் அருள்நிதிக்கு ஜோடியாக நடிக்கிறார். படத்துக்குக் சாம் சி.எஸ். இசையமைக்கிறார். கல்லறையில் இருந்தபடி கையில் ‘டிமாண்டி காலனி 2’ டாலரை வைத்திருக்கும் அருள்நிதி போஸ்டர் ஏற்கெனவே வெளியாகி மிரள வைத்தது.

டிரெய்லர் வெளியானால் படத்துக்கு இன்னும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஹாரர் படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வரும் அருள்நிதி ‘டிமாண்டி காலனி 2’ படத்திலும் முக்கிய பங்களித்து இருப்பார் என்று தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in