உடல்நல பாதிப்பால் தொடர்ந்து அவதி: உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவி

உடல்நல பாதிப்பால் தொடர்ந்து அவதி: உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவி

தென்காசி மாவட்டம், புளியரை பகுதியில் உடல்நலமின்மையால் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், புளியரை அருகில் உள்ள கேசவபுரம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் அருள் செல்வக்குமார். இவரது மகள் அமுதா(21) குற்றாலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ ஆங்கிலம் படித்துவந்தார். இவர் கடந்த 25-ம் தேதி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். முதலில் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்ட அமுதா, தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இதுகுறித்து புளியரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ‘அமுதா அண்மைக்காலமாக உடல்நலமின்மையால் அவதிப்பட்டு வந்தார். அதன் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்தது. இருந்தும், அமுதாவின் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் இருக்குமா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகின்றது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in