தசரா குழுக்களுக்குள் மோதல்: நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட டிரைவர்!

கொலை
கொலை

தசராவிற்காக வெளியூரில் இருந்து வந்த டிரைவர் படுகொலை செய்யப்பட்டார். தசரா குழுவினருக்குள் ஏற்பட்ட மோதலினால் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் பள்ளங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பட்டுராஜ். இவரது மகன் ரேவந்த்குமார்(27) இவர் சென்னையில் சொந்தமாக லோடு ஆட்டோ ஓட்டி வந்தார். இதற்காக இவர் கோயம்பேடு பகுதியில் அறை எடுத்து தங்கிவந்தார். தசரா பண்டிகையை முன்னிட்டு ரேவந்த்குமார் ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் அவர் நேற்று நள்ளிரவு பள்ளங்கிணறு - செட்டிக்குளம் சாலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

சாத்தான்குளம் போலீஸார் நடத்திய விசாரணையில், மர்மநபர்கள் சிலர் ரேவந்த்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. போலீஸார் நடத்திய விசாரணையில் ரேவந்த்குமாரின் பள்ளங்கிணறு ஊரில் இரு தசரா குழுக்கள் செயல்பட்டு வந்ததும், அவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதனால் அவர்கள் இந்த கொலைச் சம்பவத்தை அரங்கேற்றினார்களா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இதேபோல் ரேவந்த்குமாரின் சித்தப்பா செந்தில்வேல் சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். அதே கும்பல் ரேவந்த்குமாரை கொன்றனரா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in