'நீ என் பெருமை சாரா!'- மகள் பிறந்தநாளில் விஜே அர்ச்சனா உருக்கம்

'நீ என் பெருமை சாரா!'- மகள் பிறந்தநாளில் விஜே அர்ச்சனா உருக்கம்

"நீ என் உயிர், நீ எப்போதும் அன்பாகவும் சுதந்திரமாகவும் இருக்க நான் உதவுவேன்" என்று தனது மகள் சாராவின் பிறந்தநாளையொட்டி விஜே அர்ச்சனா உருக்கமான கூறியுள்ளார்.

சன் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வந்த விஜே அர்ச்சனா திருமணத்திற்கு பிறகு தொகுப்பாளர் பணிக்கு இடைவெளி விட்டிருந்தார். பின்பு மீண்டும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தனது மகள் சாராவுடன் அம்மா, மகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கம்பேக் கொடுத்தார்.

பின்பு விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு கொண்டார். சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்திலும் தன் மகள் சாராவுடன் நடித்தார். இன்று சாராவுக்கு 15-வது பிறந்தநாள் என்பதால் அவர் குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சாரா குழந்தையாக இருந்ததில் இருந்து இப்போதுள்ள வரை புகைப்படங்களை வீடியோவாக தொகுத்து வெளியிட்டிருக்கும் அந்த பதிவில், 'பிறந்தநாள் வாழ்த்துகள் சாரா! நீ தான் என்னுடைய எல்லாமும். நீ உள்ளேயும் வெளியேயும் அழகான உறுதியான பெண்ணாக வளர்ந்து நிற்கிறாய். உன்னை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

மேலும், Katie Brown எழுதியுள்ள பாடலை அவர் பகிர்ந்துள்ள வீடியோவில் குறிப்பிட்டு இருப்பவர், அதற்கு நன்றியும் கூறி இருக்கிறார். "நீ என் உயிர், நீ எப்போதும் அன்பாகவும் சுதந்திரமாகவும் இருக்க நான் உதவுவேன். உன் முகமும் அதன் சிரிப்புமே எனது மகிழ்ச்சி. அதற்காக நான் என்ன வேண்டுமானாலும் நான் செய்வேன் என்று இந்தப் பாடல் இருக்கும். இந்த வரிகளை தான் நானும் என் மகளுக்கு கடிதமாக எழுத விரும்பினேன். நீ என்பது நீ மட்டும் தான் சாரா" என மிகவும் நெகிழ்ச்சியாக தனது மகளின் 15-வது பிறந்த நாளுக்கு இந்த பதிவை பகிர்ந்திருக்கிறார் அர்ச்சனா.

சாராவின் பிறந்தநாளுக்கு அர்ச்சனாவின் சின்னத்திரை நண்பர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in