திடீரென நிறுத்தப்படும் 'எங்க வீட்டு மீனாட்சி'- காரணம் என்ன?

திடீரென நிறுத்தப்படும் 'எங்க வீட்டு மீனாட்சி'- காரணம் என்ன?

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'எங்க வீட்டு மீனாட்சி' சீரியல் க்ளைமேக்ஸ் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

விஜய் டிவியின் 'லொள்ளு சபா' நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் ஜீவா. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் மீண்டும் 'எங்க வீட்டு மீனாட்சி' சீரியல் மூலம் சின்னத்திரைக்கே வந்தார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த சீரியல் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக ஆரம்பித்தது. கதாநாயகியாக ஸ்ரித்தா சிவதாஸ் நடிக்க, பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து வந்தனர். காரைக்குடி வீடு, கூட்டுக்குடும்பம், கதாநாயகன் நாயகி என சீரியலுக்கு உரிய அம்சங்கள் இருந்தாலும் கதையில் சுவாரஸ்யம் இல்லாததால் சேனல் தரப்பில் இந்த சீரியலுக்கான டி.ஆர்.பி. வெகுவாக குறைந்தது.

இதனால், இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வர சேனல் தரப்பு முடிவு எடுத்துள்ளது. இதனால், வெறும் 119 எபிசோடுகளே கடந்துள்ள நிலையில் இப்போது சீரியல் க்ளைமேக்ஸ் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

க்ளைமேக்ஸில் கதாநாயகனான சிதம்பரத்திற்கும் மீனாட்சிக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டு சீரியல் கதையை முடிக்க உள்ளனர். இப்போது அதற்கான காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in