‘பிக் பாஸ்’ ஆறாவது சீஸனில் இடம்பெறுகிறாரா ரக்‌ஷன்?

‘பிக் பாஸ்’ ஆறாவது சீஸனில் இடம்பெறுகிறாரா ரக்‌ஷன்?

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் ஆறாவது சீஸன் ஆகஸ்ட் இறுதி வாரத்தில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது. வழக்கமாக ஜூலை இறுதி வாரத்தில் தொடங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த இரண்டு சீஸன்களுமே கரோனா காரணமாகத் தாமதமாகவே தொடங்கின. அந்த வரிசையில் இந்த சீஸனும் அக்டோபரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘விக்ரம்’ படப்பிடிப்பு காரணமாக பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து கமல்ஹாசன் விலகினார். பின்பு சிலம்பரசன் தொகுத்து வழங்கியதால் ஆறாவது சீஸனையும் அவரே தொகுத்து வழங்குவார் என பேச்சு அடிபட்டது. ஆனால், கமல்ஹாசன் தானே ஆறாவது சீஸனைத் தொகுத்து வழங்குவதை உறுதிப்படுத்தினார்.

சீஸன் விரைவில் தொடங்கவிருக்கிறது எனும்போது இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது. வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர்கள், வெளிநாட்டு மாடல்கள், பாடகர்கள், நகைச்சுவைக் கலைஞர்கள் ஆகியோருடன் விஜய் டிவி பிரபலங்களும் பங்கேற்பார்கள். அந்த வகையில் ஆறாவது சீஸனில் விஜய் டிவியில் இருந்து விஜே ரக்‌ஷன் போட்டியாளராக வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஷ்ருதிகா
ஷ்ருதிகா

ரக்‌ஷன் தொகுத்து வழங்கும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸன் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் அடுத்து பிக் பாஸ் தான். பிக் பாஸின் முந்தைய சீஸன்களிலேயே ரக்‌ஷன் கலந்துகொள்வதாக இருந்து பின்னர் சில காரணங்களால் அது சாத்தியமாகவில்லை. ஆனால், இந்த சீஸனில் அவர் நிச்சயமாகக் கலந்துகொள்வார் என்றும் இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்படுகிறது. கூடவே ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து ஷ்ருதிகா கலந்துகொள்வார் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அவருடனும் விஜய் டிவி சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in