‘வெற்றி நிச்சயம்’ - கணவர் பிறந்தநாளில் விஜே மணிமேகலை உற்சாகம்!

‘வெற்றி நிச்சயம்’ - கணவர் பிறந்தநாளில் விஜே மணிமேகலை உற்சாகம்!

சன் மியூசிக் சேனலில் முன்னணித் தொகுப்பாளராக வலம் வந்தவர் விஜே மணிமேகலை. இவருக்கும் ஹூசைன் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. தற்போது மணிமேகலை விஜய் டிவியின் சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’யில் சமையல் தெரியாத நகைச்சுவை கோமாளியாகப் பங்கேற்றிருக்கிறார்.

இது தவிர மணிமேகலையும் ஹுசைனும் சேர்ந்து ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்கள். வருடாவருடம் இரண்டு பேரும் தங்களது பிறந்தநாளைத் தங்களது சொந்த கிராமத்தில் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் ஹூசைனின் பிறந்தநாளை இந்த வருடமும் தவறாமல் கிராமத்தில் கொண்டாடி இருக்கின்றனர்.

சொந்த ஊரில் நிலம் வாங்கியுள்ள அந்த ஜோடி, அங்கிருந்தே பிறந்தநாள் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில் மணிமேகலை, ‘என்னுடைய எல்லாமுமாய் இருப்பவனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். எல்லாமே உனக்கு எப்போதுமே வெற்றிதான். அந்த வெற்றிக்குத் துணையாய் நான் எப்போதுமே உன் கூடவே இருப்பேன். இந்த வருடப் பிறந்தநாள் கொண்டாட்டம் நம்முடைய சொந்த ஊரில் மிக முக்கியமான ஒன்று. இதே போல நிறைய சந்தோஷமான தருணங்கள் உன் வாழ்க்கையில எப்போதுமே இருக்கும். இருக்க வைப்பேன். பிறந்தநாள் வாழ்த்துகள் சோட்டி’ என பதிவிட்டுள்ளார்.

மணிமேகலையின் இந்த வாழ்த்துக்கு ஹூசைன் தன்னுடைய அன்பையும் நன்றியையும் தெரிவித்துள்ளார். இன்னும் மூன்று நாட்களில் மணிமேகலையின் பிறந்தநாளும் வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in