‘கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கியது’ - களவுபோன பைக் பற்றி விஜே மணிமேகலை வருத்தம்!

‘கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கியது’ - களவுபோன பைக் பற்றி விஜே மணிமேகலை வருத்தம்!

சன் மியூசிக்கில் விஜேவாக வலம் வந்தவர் மணிமேகலை. பிறகு 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் சமையல் தெரியாத கோமாளியாக இவர் கலந்துகொண்டு செய்த சேட்டைகள் இவருக்கு மேலும் ரசிகர்களைச் சேர்த்தன.

இவருக்கும் ஹூசைன் என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் தங்கள் திருமண நாளைக் கொண்டாடிய இருவரும், பல தடைகளைக் கடந்து தங்கள் திருமண வாழ்க்கை மிக மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருப்பதாகப் புகைப்படங்களைத் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்திருந்தனர்.

இந்த ஜோடி சமீபத்தில் பிஎம்டபிள்யூ கார் வாங்கி இருந்தது. இதற்கு ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மணிமேகலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹூசைனுடன் ஒரு பைக் முன் அமர்ந்து இருக்கும்படியான புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில் கேப்ஷனாக, ‘இன்று அதிகாலை எங்களுடைய இந்த பைக் திருடு போய்விட்டது. அசோக் நகரில் எங்கள் நண்பரின் இடத்தில் நிறுத்திவைத்திருந்தோம். எங்களது திருமணத்திற்குப் பிறகு நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்து ஆசையாக வாங்கிய முதல் பைக் இது. இது திருடு போனதில் மிகவும் வருத்தத்தில் இருக்கிறோம். வருஷத்துக்கு ஒரு சம்பவம்... எங்கிருந்துதான் இப்படி வருதோ' என வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார் மணிமேகலை.

அந்தப் பதிவிலேயே பைக்கின் பதிவு எண் மற்றும் மற்ற விவரங்களைக் கொடுத்திருக்கிறார் மணிமேகலை. இதையடுத்து பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்துவருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in