விஜய் டிவி புகழ் ராமரின் இன்னொரு முகம்: ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய எம்.பி-யின் பதிவு!

விஜய் டிவி புகழ் ராமரின் இன்னொரு முகம்: ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய எம்.பி-யின் பதிவு!
மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனுடன் ராமர்...

விஜய் தொலைக்காட்சியில் ‘கலக்கப் போவது யாரு?’ நிகழ்ச்சி மூலமாக நகைச்சுவைக் கலைஞராகப் பிரபலமானவர் ராமர். அவரது நகைச்சுவைக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். .

இந்த நிலையில், மதுரை மக்களவை உறுப்பினரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ராமருடனும் ஊர் மக்களுடனும் எடுத்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார். அந்தப் பதிவில், ‘இன்று கொட்டாம்பட்டி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் நடைபெறும் ஆய்வின்போது 18 சுக்காம்பட்டி கிராமத்தில் கிராம அலுவலராகப் பணியாற்றும் சின்னத்திரைக் கலைஞர் விஜய் டிவி புகழ் ராமரைச் சந்தித்தேன். மகிழ்ச்சி’ எனப் பதிவிட்டுள்ளார்.

ராமர் கிராம அலுவலராகப் பணியாற்றி வருகிறார் என்ற செய்தி அவரது ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. ராமரின் நகைச்சுவை நிகழ்ச்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. குறிப்பாக அவர் பேசிய ‘என்னம்மா இப்படி பண்றீங்களேமா?’ எனும் வசனம் மிகவும் புகழ் பெற்றது. பல திரைப்படங்களில் நகைச்சுவைக்காகவும் பாடலுக்காகவும் பயன்படுத்தப்பட்டதுடன் படத்தலைப்பாகவும் வைக்கப்பட்டுள்ளது.

சின்னத்திரை நகைச்சுவை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாது, ‘எதற்கும் துணிந்தவன்’, ‘சிக்ஸர்’ உள்ளிட்ட சில படங்களிலும் ராமர் நடித்துள்ளார். பல தோல்விகளையும் சோதனைகளையும் சந்தித்து நகைச்சுவைக் கலைஞராகத் தனக்கான இடத்தைப் பிடித்திருக்கும் ராமர், இன்னொரு பக்கம் கிராம நிர்வாக அலுவலராகவும் பணிபுரிந்து வருவது தங்களுக்கு ஊக்கம் தரும் விஷயம் என சு.வெங்கடேசனின் பதிவில் ரசிகர்கள் பலர் பின்னூட்டம் எழுதிவருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in