பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த புதிய நபர்கள்... குழப்பத்தில் பார்வையாளர்கள்!

பிக் பாஸ் இல்லத்தில்...
பிக் பாஸ் இல்லத்தில்...
Updated on
1 min read

பிக் பாஸ் இல்லத்திற்குள் இரண்டு புது போட்டியாளர்கள் நுழைந்திருப்பதாக வெளியாகி இருக்கும் புரோமோ ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் அதே சமயம் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் இல்லத்திற்குள் போட்டி பரபரப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. நேற்று பிக் பாஸில் இருந்து குறைந்த மக்கள் வாக்குகள் அடிப்படையில் ஐஷூ வெளியேற்றப்பட்டிருக்கிறார். இதனை அடுத்து முதல் நாளான இன்று நாமினேஷன் புராசஸூம் தொடங்கி இருக்கிறது. இதில் பூர்ணிமா, அக்‌ஷயா, விசித்ரா, மணி, விக்ரம், பிராவோ ஆகியோரது பெயர்கள் அதிகம் அடிபடுகிறது. மேலும் இன்று வெளியாகி இருக்கும் முதல் புரோமோவில் இரண்டு புது நபர்கள் இருப்பது பார்வையாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில், இந்த புரோமோவில் ‘குக் வித் கோமாளி’ புகழ் மற்றும் சிருஷ்டி ஆகிய இரண்டு பேர் பிக் பாஸ் இல்லத்திற்குள் வந்துள்ளனர். ஏற்கெனவே, இதற்கு முந்தைய பல சீசன்களில் பிக் பாஸ் இல்லத்திற்குள் போவார் என புகழ் பெயர் அடிபட்டது நினைவிருக்கலாம்.

இப்போது அவரும் சிருஷ்டியும் பிக் பாஸ் இல்லத்திற்குள் வந்திருப்பது போட்டியாளராகவா என ரசிகர்கள் குழம்ப இன்னும் சிலர் தீபாவளி ஸ்பெஷலாக இருவரும் வந்திருக்கிறார்கள் எனவும் தெளிவுப்படுத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in