பிக்பாஸ் அல்டிமேட்டில் மேலும் இரண்டு வைல்ட் கார்ட் என்ட்ரி!

பிக்பாஸ் அல்டிமேட்டில் மேலும் இரண்டு வைல்ட் கார்ட் என்ட்ரி!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஏற்கெனவே மூன்று வைல்ட் கார்ட் என்ட்ரி இருந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு வைல்ட் கார்ட் என்ட்ரி நடந்துள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டாரில் 24X7 என நேரலையாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே இதுவரை தமிழ் பிக்பாஸில் இல்லாத அளவுக்கு நிறைய மாற்றங்கள், புது விஷயங்கள் இருந்தன. அந்த வகையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டிருந்த நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.

அவருக்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரசிகரான நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்கி வருகிறார். வனிதா நிகழ்ச்சியில் இருந்து விருப்பமில்லாமல் பாதியில் வெளியேற இந்த சீசனின் வைல்ட் கார்ட் என்ட்ரியாக 'கலக்க போவது யாரு?' சதீஷ் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் வந்தனர்.

சுரேஷ் சக்ரவர்த்தி இது மூன்றாவது முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வருவது என்றாலும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இவரும் நிகழ்ச்சியை விட்டு பாதியில் வெளியேறி இருக்கிறார்.

சதீஷூம் காமெடிக்கான கன்டென்ட் கொடுப்பதில் சுமாராக இருப்பது, விளையாட்டில் ஒன்றிணையாமல் இருப்பது போன்ற காரணங்களால் இப்போது நிகழ்ச்சி சுவாரஸ்யத்திற்காக 'கலக்க போவது யாரு?' தீனா மற்றும் சாண்டி மாஸ்டர் ஆகியோரை வைல்ட் கார்ட் என்ட்ரியாக கொண்டு வந்துள்ளனர். ஏற்கெனவே மூன்றாவது வைல்ட் கார்ட் என்ட்ரியாக ரம்யா பாண்டியன் உள்ளே வந்துள்ள நிலையில் பிக்பாஸ் வரலாற்றிலேயே ஐந்து போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வருவது இதுவே முதல் முறை.

பிக்பாஸ் மூன்றாவது சீசன் கலகலப்பாக போக முக்கிய காரணங்களில் சாண்டி மாஸ்டரின் காமெடியும் ஒன்று. அவரின் வருகை பிக்பாஸ் அல்டிமேட்டை மேலும் சுவாரஸ்யமாக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

Related Stories

No stories found.