பிறந்த நாளில் அம்மாவான சின்னத்திரை நடிகை: ரசிகர்கள் வாழ்த்து!

காயத்ரி-யுவராஜ்
காயத்ரி-யுவராஜ்

சின்னத்திரை நடிகை காயத்ரி தனது பிறந்தநாளான இன்று தனது இரண்டாவது குழந்தைக்கு அம்மாவாகி உள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ந்துள்ளார்.

’தென்றல்’, ‘சரவணன் மீனாட்சி’, ‘தாமரை’ போன்ற பல சீரியல்களில் நடித்து பிரபலமானார் காயத்ரி. நடனத்தில் ஆர்வம் கொண்டவரான காயத்ரி ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவருடன் சக போட்டியாளராகக் கலந்து கொண்ட யுவராஜை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 14 ஆண்டுகளாகுகிறது. இவர்களுக்கு ஏற்கெனவே 13 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், மீண்டும் கர்ப்பமானார் காயத்ரி.

’மீனாட்சி பொண்ணுங்க’ என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருந்தவர் கர்ப்பமானதால் அந்த சீரியலில் இருந்து பாதியில் விலகினார். இந்த நிலையில், இன்று அதிகாலை இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலம் என்பதை யுவராஜூம், காயத்ரியும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

குழந்தையின் கைகளையும், கால்களையும் பிடித்தபடி இருக்கும் புகைப்படங்களையும் அவர்கள் பகிர்ந்துள்ளனர். காயத்ரியின் பிறந்தநாளான இன்று அவருக்கு பெண்குழந்தை பிறந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம் என இருவரும் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு ரசிகர்களும், சின்னத்திரை பிரபலங்களும் இந்த ஜோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in