`நீ இல்லையே சித்ரா, வருத்தமாக இருக்கிறது’: பிறந்தநாளில் சின்னத்திரை பிரபலங்கள் உருக்கம்!

`நீ இல்லையே சித்ரா, வருத்தமாக இருக்கிறது’: பிறந்தநாளில் சின்னத்திரை பிரபலங்கள் உருக்கம்!

விஜே சித்ராவின் பிறந்தநாளை ஒட்டி சின்னத்திரை பிரபலங்கள் பலரும் அவருடனான நினைவுகளை பகிர்ந்துள்ளனர்.

சின்னத்திரையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் விஜே சித்ரா. பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர் பணி, சீரியல் என வேலை செய்திருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இவரது கதாப்பாத்திரமான முல்லை இவருக்கு நல்ல பெயரைப் பெற்று தந்தது.

இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹோட்டல் அறை ஒன்றில் தங்கியிருந்த சித்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்திற்கு சில மாதங்களுக்கு முன்புதான் தொழிலதிபர் ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. அவருக்கும் சித்ராவுக்கும் பிரச்சினை, தொழில்ரீதியிலான தொல்லை என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இதுவரை சித்ரா மரணத்திற்கான காரணம் தெளிவாக கண்டறியப்படவில்லை.

இன்று விஜே சித்ராவின் பிறந்தநாள். அவரது பிறந்தநாளையொட்டி சின்னத்திரையை சேர்ந்த அவரது நண்பர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து அவருடனான நினைவுகளை பகிர்ந்துள்ளனர். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீனா கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா, அந்த சீரியலில் தனக்கு நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் சித்ராவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ‘மிஸ் யூ சித்து. நீ இல்லாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது. நீ எங்கு இருந்தாலும் அங்கு மகிழ்ச்சியாக இரு’ என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.

அதே சீரியலில் தனம் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா, அவருடன் சீரியலில் இருக்கும்படியான புகைப்படங்களை பகிர்ந்து, ‘பிறந்தநாள் வாழ்த்துகள் சித்ரா. மிஸ் யூ! லவ் யூ! என் அன்பு தங்கையே’ என்று உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

சின்னத்திரையில் காமெடியில் கலக்கி வருபவரான பாலா, சித்ராவின் நெருங்கிய நண்பர். அவரும் சித்ராவின் பிறந்தநாளுக்கான காமன் டிபி ஒன்றை பகிர்ந்து ‘உன்னை மிஸ் செய்கிறோம் தங்கச்சி!’ என்று உருக்கமாக பகிர்ந்திருக்கிறார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கம்பம் மீனாவும் சித்ராவுடனான புகைப்படங்களை பகிர்ந்து, ‘பிறந்தநாள் வாழ்த்துகள் தங்கம்! மண்ணுலகை ஆண்டது போதும் என்று விண்ணுலகை ஆள சென்றுவிட்டாய். நீ எங்கு இருந்தாலும் அங்கிருப்பவர்களின் மனதில் இடம்பிடிக்கும் மகாராணி. என்றும் நீங்கா நினைவுகளோடு, முல்லையாக அரிதாரம் பூசிய சித்திரையே சித்துமா வாழ்த்துகள் செல்லம்’ என கூறியுள்ளார்.

இவர்களோடு சித்ராவின் ரசிகர்கள் பலரும் இணையத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருவதோடு அவர் நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in