இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுத்த பாண்டியன் ஸ்டோர் 1 நடிகர்கள்...ரசிகர்கள் அதிர்ச்சி!

'பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்
'பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்

'பாண்டியன் ஸ்டோர்ஸ்1' சீரியல் நடிகர்கள் இரண்டாம் பாகத்தில் இல்லாதது குறித்தானக் காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரக்கூடிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் முடிவடைய உள்ளது. இதன் இரண்டாம் பாகம் அடுத்து ஒளிபரப்பாகும் என அதற்கான புரோமோவையும் தொலைக்காட்சி தற்போது ஒளிபரப்பி வருகிறது. முதல் பாகத்தில் மூர்த்தியாக நடித்த ஸ்டாலின் மட்டுமே இரண்டாம் பாகத்தில் இருக்கும் புரோமோ உள்ளது. மற்ற நடிகர்கள் யாரும் பெரிதாக இரண்டாம் பாகத்தில் இடம்பெறவில்லை. இதற்கான காரணம் என்ன என்பது குறித்தன தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

'பாண்டியன் ஸ்டோர்ஸ்2' புரோமோவில்
'பாண்டியன் ஸ்டோர்ஸ்2' புரோமோவில்

முதல் பாகத்தில் நடித்த நடிகர்களுக்கு பெரிதளவில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மூலம் புகழ் கிடைத்திருக்கிறது. இதனால், அவர்களுக்குத் திரைப்படம் மற்றும் வெப் சீரிஸ் வாய்ப்புகளும் கிடைத்திருப்பதால் இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுத்திருக்கிறார்கள். இதனால், சேனல் தரப்பும் அவர்கள் மீது கோபத்தில் இருப்பதால் இந்த சீசனில் புதியவர்களை வைத்தே தொடங்கலாம் என முடிவெடுத்து சீரியலை தொடங்கி இருக்கிறது.

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முதல் பாகத்தில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்த வெங்கட் தற்போது விஜய் டிவியின் 'கிழக்கு வாசல்' சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதேபோல, சரவண விக்ரம் பிக் பாஸில் இருக்கிறார். முதல் பாகத்தில் நடித்த ஹேமா இரண்டாம் பாகத்திலும் தொடர்வார் எனத் தெரிகிறது. இதனால், இரண்டாம் பாகத்தின் வாய்ப்பை சுஜிதா மற்றும் குமரன் மறுத்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in