`என்னுடைய நீண்ட நாள் கனவு இது'- சின்னத்திரை நடிகை கேபி குஷி

`என்னுடைய நீண்ட நாள் கனவு இது'- சின்னத்திரை நடிகை கேபி குஷி

சின்னத்திரை நடிகை கேபி தற்போது கார் வாங்கியுள்ளார். இந்த செய்தியை மகிழ்ச்சியாக வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேபி. நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர், விஜய் தொலைக்காட்சியில் ‘ஜோடி நம்பர்1’ உள்ளிட்ட பல நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றார். பின்பு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘3’, ‘சென்னையில் ஒரு நாள்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பின்பு கடந்த ‘பிக்பாஸ் சீசன்4’ல் கலந்து கொண்டார் கேபி.

சிறிது காலம் தொலைக்காட்சி, படங்களில் இருந்து விலகி இருந்தவருக்கு ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் நான்காவது சீசன் மீண்டும் புகழ் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து கேபி படங்களில் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் விஜய் டிவியில் ‘ஈரமான ரோஜாவே’ சீரியலில் இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானார்.

இது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பியபோது, "எனக்கு வரும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்கிறேன். சீரியலில் நடிப்பது எனக்கு சந்தோஷமே" எனவும் கூறினார்.

இப்போது கேபி தன்னுடைய முதல் காரை வாங்கியுள்ளார். இது குறித்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள கேபி, “என்னுடைய சம்பாத்தியத்தில் கார் வாங்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. பல மாதங்கள் சிந்தித்த பின்னர் நான் இறுதியாக இந்த முடிவு எடுத்தேன். டாட்டா ஹார்ரியர் டார்க் எடிஷன் காரை என்னுடைய முதல் காராக தேர்ந்தெடுத்தது மகிழ்ச்சி. இந்த வீடியோ முழுவதும் என்னை சிரித்த முகத்தோடு மட்டும் தான் பார்ப்பீர்கள். இந்த விஷயத்தில் என் அம்மாவுக்கு என்னை நினைத்து பெருமைதான். நீங்கள் தினமும் கொடுக்கும் உங்களுடைய அன்பு, ஆதரவால் மட்டுமே சாத்தியமாயிற்று. இந்த ‘பீஸ்ட்’ என்னை பாதுகாக்க! லவ் யூ ஆல்!!’ என மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

கேபி பகிர்ந்துள்ள இந்த செய்திக்கு ரம்யா பாண்டியன், அஜித் என அவரது நண்பர்கள் வட்டாரமும் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.