`சந்திரமுகி’ பட கதாபாத்திரத்தை ரீமேக் செய்த பிக் பாஸ் நடிகை: தொடரும் கொலை மிரட்டல்கள்!

'சந்திரமுகி' படத்தில்...
'சந்திரமுகி' படத்தில்...

’சந்திரமுகி’ பட கதாபாத்திரம் ஒன்றை ரீகிரியேட் செய்து புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ள பிக் பாஸ் நடிகை சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். மேலும் அவருக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை உர்ஃபி ஜாவித்
நடிகை உர்ஃபி ஜாவித்

இந்தி பிக் பாஸ் ஓடிடியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை உர்ஃபி ஜாவித். சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வரக்கூடிய இவர் வித்தியாசமாக ஆடை அணிவதற்குப் புகழ் பெற்றவர். துணியை கிழித்து அணிவது, கீபோர்டால் உடை, நோட்டுப்புத்தகங்கள், காலிஃபிளவர் கொண்டு உடை அணிவது என இவரது இன்ஸ்டாகிராம் பக்கம் வித்தியாசமான ஆடைகளைக் கொண்டு எடுக்கப்பட்ட கவர்ச்சியான ஃபோட்டோஷூட்டால் நிரம்பி வழிகிறது. இதற்காக இணையவாசிகள் இவரை கிண்டல் செய்வதும் உண்டு.

நடிகை உர்ஃபி ஜாவித்
நடிகை உர்ஃபி ஜாவித்

இந்த நிலையில், அவர் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றுக்கு கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருப்பது உர்ஃபி ஜாவத்திற்கே அதிர்ச்சி அளிக்கும் வண்ணம் உள்ளது. கடந்த 2007ம் ஆண்டு இந்தியில் வெளியான ’பூல் பூலையா’ படத்தில் இடம் பெற்ற ராஜ்பால் யாதவின் நகைச்சுவை கதாபாத்திரமான ’சோட் பண்டிட்’டை அவர் மறு உருவாக்கம் செய்து அந்தப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நடிகை உர்ஃபி ஜாவித்
நடிகை உர்ஃபி ஜாவித்

இந்த படம் மலையாளத்தில் ’மணிசித்ரத்தாழ்’ ஆகவும், தமிழில் ’சந்திரமுகி’யாகவும் ரீமேக் ஆனது. சோட் பண்டிட் கேரக்டரை மீண்டும் உருவாகும் வகையில் காவி நிறத்தில் ஆடையணிந்த உர்ஃபி ஜாவத், தலையில் ஊதுவத்தியை எரிய வைத்து கொண்டு தலைமுடிக்குள் சொருகி கொண்டார். மேலும் முகத்தில் சிவப்பு நிறத்தில் மேக்கப் போட்டுக்கொண்டு புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். 

இந்தப் படங்கள் மூலமாகதான் உர்ஃபிக்கு தற்போது கொலை மிரட்டல்கள் வந்துள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், ‘காரணமே இல்லாமல் எனக்கு கொலை மிரட்டல்களும், பாலியல் பலாத்கார மிரட்டல்களும் வருகிறது. நான் சோட் பண்டிட் ஆடையை அணிந்த பிறகு தான் இதுபோன்ற கருத்துகள் எழுந்துள்ளது. எந்த நிறமும் எந்த மதத்திற்கும் சொந்தமானது அல்ல. அகர்பத்தி எந்த மதத்திற்கும் சொந்தமானது அல்ல. எந்த பூவும் எந்த மதத்திற்கும் சொந்தமானது  அல்ல’ என காட்டமாக அவர் பதிவிட்டுள்ளார். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in