பிக் பாஸ் 6: சீஸனைக் கலக்கப்போகும் சிங்கப் பெண்கள் யார்?

பிக் பாஸ் 6: சீஸனைக் கலக்கப்போகும் சிங்கப் பெண்கள் யார்?

பிக் பாஸ் ஆறாவது சீஸன் ஆரம்பிக்க இருக்கும் நிலையில், அதில் கலந்துகொள்ளவிருக்கும் பெண் போட்டியாளர்கள் பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது.

உலக புகழ்பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் தனது ஆறாவது சீஸனைத் தொடங்கவிருக்கிறது. இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதற்கான புரோமோ டீஸரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார்.

ஒவ்வொரு சீஸன் ஆரம்பிக்கும் முன்பும் அந்தந்த சீஸனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்களின் உத்தேசத் தகவல் வெளியாகும். அந்த வகையில் இந்த சீஸனில் கலந்துகொள்ளலாம் என எதிர்பார்க்கப்படும் பெண் போட்டியாளர்கள் குறித்த உத்தேசப் பட்டியல் வெளியாகியிருக்கிறது.

யார் யார்?

அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியின் முக்கியத் தொகுப்பாளரான டிடி பெயர் இந்த சீஸன் ஆரம்பிக்கும் முன்பிருந்தே அடிபடுகிறது. ஐந்தாவது சீஸனில் விஜய் டிவியின் மற்றொரு தொகுப்பாளரான பிரியங்கா கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, மற்றொரு தொகுப்பாளரான விஜே அஞ்சனாவும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்கள் தவிர பின்னணிப் பாடகியான ராஜலட்சுமி, ‘குக் வித் கோமாளி’ புகழ் நடிகை தர்ஷா குப்தா, ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரோஷினி, ‘வழக்கு எண் 18/9’ல் நடித்த மணீஷா யாதவ், ’இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ புகழ் ஷில்பா மஞ்சுளா ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன.

மேலும், இசையமைப்பாளர் இமானின் முன்னாள் மனைவி, ‘ராஜா ராணி’ சீரியலில் நடித்த அர்ச்சனா (இவர் சமீபத்தில் சீரியலை விட்டு விலகினார்), சிம்பு பெயரை வைத்து சர்ச்சையில் சிக்கிய சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி ஆகியோரது பெயர்களும் இந்தப் பட்டியலில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in