`சுந்தரி’ சீரியல் நடிகருக்கு விரைவில் திருமணம்... ரசிகர்கள் வாழ்த்து!

அரவிஷ்- ஹரிகா
அரவிஷ்- ஹரிகா

’சுந்தரி’ சீரியலில் நடித்துப் புகழ் பெற்ற நடிகருக்கும் பிரபல சீரியல் நடிகைக்கும் விரைவில் நிச்சயதார்த்தமும் அதைத் தொடர்ந்து திருமணமும் நடக்க இருக்கிறது என சம்பந்தப்பட்ட ஜோடி தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சுந்தரி’. எளிய பின்னணியைக் கொண்ட சுந்தரி எப்படி பல தடைகளைத் தாண்டி கலெக்டர் ஆகிறாள், பின்பு அவள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன என்பது பற்றிய கதையாக ‘சுந்தரி’ சீரியல் கதை நகர்ந்து வருகிறது. இந்த சீரியலில் ஹீரோவின் நண்பனாக நடித்து பிரபலமானவர் நடிகர் அரவிஷ். இவர்தான் தனது திருமணம் குறித்தானத் தகவலை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

’திருமகள்’ என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வரக்கூடிய ஹரிகாவுடன் தான் இப்போது அரவிஷூக்குத் திருமணம் நடக்க இருக்கிறது. இதுகுறித்து அவர்கள் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்கள். விரைவில் நடக்க இருக்கும் இவர்களது நிச்சயதார்த்தத்திற்கான ஷாப்பிங் முடித்துவிட்டதாக சொல்லும் இந்த ஜோடிக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in