செய்தி வாசிப்பாளர் கண்மணி - சீரியல் நடிகர் நவீன் திருமணம்?

செய்தி வாசிப்பாளர் கண்மணி - சீரியல் நடிகர் நவீன் திருமணம்?
கண்மணி

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபலமானவர் கண்மணி. இவருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘இதயத்தை திருடாதே' சீரியல் நடிகர் நவீனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

நவீன் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என பதிவு போட்டதிலிருந்து, இது திருமணம் குறித்த செய்தியா என பலரும் அவரிடம் கேட்டபடி இருந்தனர். இன்னொரு பக்கம் கண்மணியும் தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் விரைவில் திருமணம் குறித்து அறிவிப்பு எதிர்ப்பார்க்கலாம் எனவும் சமீபத்திய பேட்டிகளில் சொல்லி வந்தார்.

இந்த நிலையில்தான், நவீன், கண்மணி மற்றும் நவீனின் அம்மா என மூவரும் இருக்கும்படியான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து ‘கனா காண்கிறேன் கண்ணாளனே' பாடலை பின்னணியில் ஒலிக்கவிட்டு 'குடும்பம்' என்ற கேப்ஷனை பகிர்ந்துள்ளார் கண்மணி.

இதே பதிவை நவீனும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் மறுபகிர்வு செய்து ஹார்ட்டின் எமோஜியோடு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இருவரது குடும்பத்தினரும் ஏற்கெனவே நண்பர்கள் என்ற நிலையில் இருவருக்கும் குடும்பத்தால் உறுதி செய்யப்பட்ட திருமணம் இது என்றும் ஜூன் மாதத்தில் திருமணம் இருக்கலாம் எனவும் சின்னத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் திருமணச் செய்தி குறித்து இருவரும் அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in