சின்னத்திரை நடிகைக்கு நிச்சயதார்த்தம்... சீரியல் நடிகரையே கரம் பிடிக்கிறார்!

நிச்சயதார்த்தம்
நிச்சயதார்த்தம்

தெலுங்கு சின்னத்திரை நடிகை ஹரிகாவுக்கு தமிழ் தொலைக்காட்சி நடிகர் அரவிஷ் உடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபல சீரியல்களில் நடித்து வருபவர் அரவிஷ். தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் கிருஷ்ணா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் மதிய வேளையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா என்ற தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் தெலுங்கு சின்னத்திரை நடிகையான ஹரிகா என்பவரை காதலித்து வந்தார். நீண்ட நாட்களாக காதலித்து வந்த இவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து நேற்று திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளனர். இவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் நேற்று கொண்டாட்டத்துடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

தங்களது நிச்சயதார்த்த வைபவத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தங்களின் என்கேஜ்மென்ட் புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளனர். திரையுலகினர் பலரும் அவர்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


இதையும் வாசிக்கலாமே... HBD Shalini Ajith | அஜித் காட்டிய அக்கறை... வாழ்க்கையை ‘அமர்க்களமாய்’ மாற்றிய சினிமா!

துறைமுகத்தில் 60 படகுகள் எரிந்து நாசம்; கதறும் மீனவர்கள்!

1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்வெட்டுக்கள்... அத்தாளநல்லூர் ஆய்வில் கண்டுபிடிப்பு!

ஐசியுவில் விஜயகாந்த்... என்ன சொல்கிறது மருத்துவமனை நிர்வாகம்?

பிக் பாஸில் மீண்டும் 3 வைல்ட் கார்டு என்ட்ரி... யார் அந்த மூன்று பேர்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in