‘குக் வித் கோமாளி' நிகழ்ச்சிக்கு வரும் சிவா - சிவாங்கி: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

‘குக் வித் கோமாளி' நிகழ்ச்சிக்கு வரும் சிவா - சிவாங்கி: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் 'டான்'. இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடித்திருக்கிறார். இப்படம் இந்த மாதம் 13-ம் தேதி நேரடியாகத் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தினை லைகா புரொடக்‌ஷன் தயாரித்து இருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தில் சின்னத்திரைப் பிரபலம் சிவாங்கியும் நடித்திருக்கிறார். சிவாங்கி தற்போது படங்கள், தனி ஆல்பம் என பிஸியாக இருந்தாலும் தனக்கு புகழ் வெளிச்சம் கொடுத்த 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

வழக்கமாக, விஜய் டிவியில் இருந்து பெரிய திரைக்குப் போன பிரபலங்கள், விஜய் டிவி சாட்டிலைட் உரிமம் வைத்துள்ள திரைப்படங்களின் புரோமோஷன்களுக்காக அந்தத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்பது வழக்கம்.

அந்த வகையில் ‘டான்’ படத்தின் புரோமோஷனுக்காக சிவகார்த்திகேயன் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் படக்குழுவோடு கலந்துகொள்ள இருக்கிறார். அதில் சிவாங்கியும் பங்கேற்கிறார். விரைவில் அந்த எபிசோட் வெளியாக இருக்கிறது. இருவரும் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர்கள் என்பதால், இந்நிகழ்ச்சியில் பல சுவாரசியமான அம்சங்கள் இடம்பெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் அந்தோணி தாசன், ராகுல் தாத்தா, மனோபாலா மற்றும் 'சார்பட்டா' சந்தோஷ் எலிமினேஷனிற்குப் பிறகு இப்போது ‘சார்பட்டா' முத்துக்குமார், சுட்டி அரவிந்த் என இரண்டு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in