‘இல்லாத என்னைப் பத்தி ஏன் பேசணும்?'- சீண்டிய நபருக்கு ஷிவாங்கி பதிலடி

‘இல்லாத என்னைப் பத்தி ஏன் பேசணும்?'- சீண்டிய நபருக்கு ஷிவாங்கி பதிலடி

விஜய் தொலைக்காட்சியில் சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது 'குக் வித் கோமாளி'. இரண்டு சீஸன்களை முடித்துள்ள இந்நிகழ்ச்சி தற்போது மூன்றாவது சீஸ்னில் உள்ளது.

அம்மு அபிராமி, கிரேஸ் கருணாஸ், வித்யுலேகா, தர்ஷன் உள்ளிட்ட பலர் இதில் போட்டியாளர்களாகக் கலந்துகொண்டுள்ளனர். இதில் கடந்த வாரம் கிரேஸ் கருணாஸ் வெளியேற்றப்பட்டார். இந்த வாரத்திற்கான எபிசோடு நேற்று ஒளிபரப்பானது.

இதில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஷிவாங்கி பங்கேற்கவில்லை. இதனையொட்டி ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் இந்த வாரம் ஷிவாங்கி கலந்துகொள்ளாததைக் குறிப்பிட்டு, 'இந்த வாரமும் cringe ஷிவாங்கி இல்ல. நன்றி' என ஒருவர் அழுதுகொண்டே நன்றி தெரிவிப்பது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

இதற்கு ஷிவாங்கி பதிலடி கொடுத்துள்ளார். இந்த ட்வீட்டை ஷிவாங்கி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ‘இல்லாத என்னை பத்தி பேசி வெறுப்பை வளர்ப்பதற்கு, இருக்கிற கோமாளிஸ் பத்தி பேசினா சூப்பரா இருக்கும்ல ப்ரோ? அதைப் பற்றி யோசியுங்கள்!' எனக் கூறியுள்ளார்.

ஷிவாங்கியின் இந்த பாசிட்டிவான பதிலடி அவரது ரசிகர்களிடையே பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது. 'ஷிவாங்கியை வெறுத்து இது போல நடந்துகொள்பவர்கள் வாழ்க்கையில் எதையும் சாதிக்கப் போவதில்லை. ஆனால், ஷிவாங்கி அவருடைய வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடனே வெறுப்பை மிகவும் பாசிட்டிவாகக் கையாண்டு வருகிறார். அதனால்தான் அவரை இன்னும் பிடித்திருக்கிறது' என ஷிவாங்கியின் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in