'பாவம் கணேசன்' புகழ் சீரியல் நடிகைக்கு திருமணம்… பிரபலங்கள் வாழ்த்து!

கணவருடன் ஷிமோனா.
கணவருடன் ஷிமோனா.

'பாவம் கணேசன்' சீரியல் மூலம் மக்களிடையே பரிட்சயமான நடிகை ஷிமோனாவுக்கு கோவையில் திருமணம் நடைபெற்றது.

கோவையைச் சேர்ந்த நடிகை ஷிமோனா சன் டிவியில் ஒளிபரப்பான 'நாயகி' தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பாவம் கணேசன்' தொடரில் நடித்தார். ஆனால், அதன் பிறகு சீரியலில் பார்க்க முடியவில்லை.

பின்னர், ஷிமோனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நிறுவனத்தில் பணியில் இருப்பது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அதைத் தொடர்ந்து, தனக்கு நிச்சயதார்த்தம் நடத்த தகவலையும், திருமணம் குறித்த செய்தியையும் ரசிகர்களுக்கு அறிவித்தார்.

ஷிமோனா
ஷிமோனா

இந்நிலையில் கோவையில் நடிகை ஷிமோனாவின் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அவரது திருமணத்தில் சின்னத்திரை நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். கிரண் என்பவரை ஷிமோனா திருணம் செய்து கொண்டுள்ளார்.

மீடியாவை விட்டு விலகி இருந்தாலும் 'பாவம் கணேசன்' ப்ரியாவாக இன்றும் மக்கள் மனதில் இடம் பெற்றுள்ள ஷிமோனாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in